ADVERTISEMENT

பொற்பனைக்கோட்டையில் பழமையான நகரம் இருந்ததற்கான சான்று கண்டுபிடிப்பு!

11:22 AM Aug 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டை கிராமத்தில் சுமார் 1.62 கி.மீ. சுற்றளவில் 30 அடி உயரத்தில் அகழியுடன் கூடிய சங்ககால சுடுமண் செங்கல் கட்டுமானத்துடன் உள்ள கோட்டையின் உள் பகுதியில் கடந்த ஜூலை 30ஆம் தேதிமுதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பேராசிரியர் இனியனை இயக்குநராகக் கொண்டு அகழாய்வுப் பணிகள் நடந்துவருகிறது.

ADVERTISEMENT

முதற்கட்டமாக, வேப்பங்குடி விவசாயி கருப்பையாவின் நிலத்தில் அகழாய்வு பணிகள் தொடங்கி, சுமார் 1.5 அடி ஆழத்திற்குத் தோண்டப்பட்டுள்ள நிலையில், இதுவரை பலவகையான பானை ஓடுகள் மற்றும் பாசி, மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது பொற்பனைக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் பழங்கால செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பழமையான நகரம் இருந்ததற்கான சான்று தென்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT