Skip to main content

புதுக்கோட்டை கிழாநிலைக்கோட்டையில் தோண்ட தோண்ட வெளிவரும் பீரங்கி குண்டுகள்...

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

வரலாற்று சுவடுகள் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை. எந்த இடத்தில் தோண்டினாலும் ஏதாவது ஒரு வரலாற்று சுவடு கிடைக்கும். ஆனால் இதனை பாதுகாக்க வேண்டிய அரசாங்கங்கள், பெயருக்கு ஒரு  பதாகை வைப்பதுடன் சரி.. அத்தனை வரலாற்றும் ஆவணங்களும் அழிக்கப்பட்டு வருகிறது. தனிநபர்கள் ஆக்கிரமித்து அழிப்பதைவிட அரசாங்க அதிகாரிகளே அழித்து வருகிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு ஆவணப்படுத்துங்கள், பாதுகாக்கப்பட வேண்டும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று உத்தரவுகள் போட்டாலும் கூட அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை அதிகாரிகள். அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை. 

 Excavated artillery shells dug in Pudukkottai


புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி, சித்தன்னவாசல், இப்படி பலநூறு கிராமங்களில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கிறது நடுகற்களும் தமிழர்களின் வரலாறுகளும். அன்னவாசல், பெருஞ்சுனை உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கூட மண் அள்ளும் திருடர்களும், கல் உடைக்கவுமாக வரலாறுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நடுகற்கள் நாசமாகிக் கொண்டிருக்கிறது. பொன்னமராவதி கண்ணனூர் பகுதியில் பரந்துவிரிந்த பரப்பளவில் நம் மூதாதையர்களின் வரலாறுகளைச் சொல்லும் நடுகற்கள் பல ஏக்கரில் நடப்பட்டும் பரப்பியும் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடங்களை ஆக்கிரமித்த வனத்துறை தைல மரக்காடுகள் வளர்க்க நடுகற்களை பிடிங்கி எறிந்து அழித்து உழுது விட்டனர். 

 

 Excavated artill Excavated artillery shells dug in Pudukkottaiery shells dug in Pudukkottai


அங்கே ஆய்வுக்கு சென்ற புதுக்கோட்டை தொல்லியல் கழக்கத்தில் தலைவர் கரு.ராசேந்திரன் தமழிர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டு வருகிறது. பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டு வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு சென்றார். சில மாதங்களுக்கு முன்பு பிடிங்கப்பட்ட கற்களை மீண்டும் நடுவதுடன் முழுமையாக பாதுக்காக்கப்ப6ட வேண்டும் ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் கற்களை பிடிங்கி அழிக்கும் செயலில் வனத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 Excavated artillery shells dug in Pudukkottai


இப்படி எங்கே தோண்டினாலும் வரலாறுகள் கிடைக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தற்போது தோண்ட தோண்ட பீரங்கி குண்டுகள் கிடைத்திருக்கிறது. அறந்தாங்கி – காரைக்குடி சாலையில் உள்ளது கீழாநிலைக்கோட்டை 41 ஏக்கர் பரப்பளவில் 30 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள செம்புரான்கல் கோட்டை சுவர்கள் உடைந்து கிடந்தாலும் பல இடங்களில் நிமிர்ந்தும் நிற்கிறது. பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் ஆட்சியை கைப்பற்றும் உள்விவகாரத்தில் பாண்டியர்கள் சகோதர யுத்தம் நடந்த போது ஒரு தரப்பிற்கு ஆதரவாக இலங்கையில் இருந்து தளபதி லங்காபுரன் குலசேகரன் தலைமையில் ஒரு படை வந்து கீழா நிலையில் இலங்கை படை முற்றிலுமாக அழிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது என்று வரலாறுகள் சொல்கிறது. 

 Excavated artillery shells dug in Pudukkottai


இந்த வரலாறு இலங்கையில் உள்ள மகா வம்சம் என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், தஞ்சை மராட்டிய மன்னர்கள் என்று அடுத்தடுத்து மாறி மாறி 18 ம் தொண்டைமான் மன்னர்களிடம் வந்த போது தான் ஆங்கிலேயர்களிடம் இணக்கமாக இருந்ததால் பீரங்கிகளும் வைத்திருந்தனர். 41 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோட்டையில் தெற்கில் முனியும், வடக்கில் காளி, ஆஞ்சநேயர் கோயில்களும் இருந்துள்ளது. பாண்டியர்கள் வசம் இருந்ததன் சாட்சியாக 4 கைகள், மண்டை ஓட்டு மாலை, கத்தி போன்றவற்றுடன் உள்ள வீரபத்திர்ர் சிலையும் சிதிலமடைந்து கிடக்கிறது. 

 Excavated artillery shells dug in Pudukkottai


கோட்டையின் மேல் ஏறினால் அதே இடத்தில் தான் இறங்கும் வழி இருந்துள்ளது. கோட்டை மதில் சுவரில் ஏறி கண்காணிக்க ஒவ்வொரு இடத்திலும் நேராக பார்க்கவும் ஓரங்களை பார்க்கவுமாக சந்துகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 பீரங்கிகள் இருந்துள்ளது ஆனால் தற்போது ஒரு பீரங்கி மட்டுமே உள்ளது. கோட்டைக்குள் தற்போது 84 கிராமத்தார்கள் வழிபடும் அரியநாச்சியார் கோயிலும் உள்ளது. கோட்டைக்குள் வீடுகளும் வந்துவிட்டது. அரியநாயகி அம்மன் கோயிலின் அழகிய குடிதண்ணர் ஊருணியை 1954 ம் ஆண்டு ராமய்யா என்பவரால் சீரமைக்கப்பட்டு  செம்புரான்கற்களால் கட்டப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது.   

தற்போது கோட்டை பகுதியில் பீரங்கி இருக்கும் கீழ்தளத்தில் மினகம்பங்கள் நட குழி தோண்டிய போது கற்களால் செய்யப்பட்ட ஏராளமான பீரங்கி குண்டுகள் வந்து கொண்டே இருந்தது. அதைப் பார்த்தவர்கள் அதற்கு மேல் தோண்டாமல் நிறுத்திவிட்டனர். கோட்டையில் பீரங்கி அமைந்துள்ள இடத்தில் பீரங்கி குண்டுகள் கிடைத்திருப்பது ஆய்வாளர்களை கோட்டையை நோக்கி இழுத்து வருகிறது. கோட்டைப் பகுதிக்குள் ஆங்காங்கே சிதிலமடைந்த கட்டிடங்களும் உள்ளது. அகழாய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் ஆர்வலர்களும் எப்போது ஆய்வுகள் நடக்கப் போகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.