Skip to main content

'மருத்துவமனையில் இறந்தவர் உடலை ஊருக்குள் கொண்டுவரக் கூடாது...' - இன்றும் மாறாத கிராமத்து வழக்கம்!!

Published on 27/11/2020 | Edited on 28/11/2020

 

 Village custom that still unchanges today

 

தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசமான பழக்கவழக்கங்கள் பழங்காலந் தொட்டு இன்றளவும் மாறாமல் நடைமுறையில் இருக்கும். இந்தப் பழக்கங்கள் இறப்பிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு எனச் சுற்றியுள்ள சுமார் 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒருவர் இறந்தால், துக்கம் விசாரிக்கச் செல்லும் உறவுக்கார ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு, கைகளைத் தழுவி, உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கெடுப்போம் என்பதை மெய்பித்துச் செல்வார்கள். இறப்பில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காக தான் சட்டை கழற்றிச் செல்லும் பழக்கம் இன்றும் உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

அதேபோல, தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பாங்கராங்கொல்லை கிராமத்தில் யாராவது இறந்தால் அந்த கிராம மக்களில் ஒருவர் மாட்டு வண்டியை கிராமத்திற்குள் ஓட்டிச் செல்ல, அந்த மாட்டு வண்டியில் வரட்டிகளையும், ரூ, 5, 10 பணத்தையும் அந்த வண்டியில் வைத்து அனுப்புகிறார்கள். கிராம மக்கள் கொடுத்த சாண வரட்டியில் இறந்தவர், சடலம் எரிக்கப்படுகிறது. ஈமச்சடங்கு செலவுகளும் கிராம மக்கள் கொடுத்த பணத்திலேயே செய்யப்படுகிறது. இது குறித்து அந்த கிராம இளைஞர்கள் கூறும் போது, சுப நிகழ்ச்சிகள் என்றால் முன்னதாகத் திட்டமிட்டுச் செய்வதால், அதற்கான பணம் திட்டமிட்டுச் செலவிடப்படுகிறது. ஆனால், இறப்பு என்பது எதிர்பாராமல் நடப்பது. அவர்களிடம் ஈமச் செலவுக்குப் பணம் இருப்பது சந்தேகம் தான். அதனால்தான் கிராமமே சேர்ந்து அந்தச் செலவை செய்கிறோம் என்றனர்.

 

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள கிராமங்களில், மருத்துவமனையில் ஒருவர் இறந்தால் அவரது உடலை ஊருக்குள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், சமூக ஆர்வலரான வீரனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மணிமாறன் பட்டுக்கோட்டையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பிராணவாயுடன் மணிமாறனை சொந்த ஊருக்குக் கொண்டு வந்தனர். ஊருக்கு வந்து சிறிது நேரத்தில் அவது உயிர் பிரிந்தது.

 

 Village custom that still unchanges today

 

இது குறித்து அப்பகுதி பெரியவர்கள் கூறும் போது, ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போய் அங்கு இறந்த பிறகு, பல்வேறு கிருமித் தொற்றுகளுடன், சொந்த ஊருக்குக் கொண்டுவரும் போது, அதன் மூலம் சிறுவர்கள், முதியவர்களுக்குக் கிருமி தொற்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான் வீட்டுக்குக் கொண்டு வராமல், நேரடியாகச் சுடுகாட்டுக்குக் கொண்டு போகும் பழக்கத்தை, எங்கள் முன்னோர்கள் செய்துள்ளனர். அந்தப் பழக்கம் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. அதே போலத் திருமணம் ஆகாதவர்கள் இறந்தால், பந்தல் அமைப்பதில்லை. கொட்டும் (பறை) அடிக்கமாட்டோம், வெடி வெடிப்பதில்லை. இந்தப் பழக்கங்கள் இன்றும் தொடர்கிறது என்றனர்.

 

தமிழர்களின் சடங்குகளை மேலோட்டமாகப் பார்த்தால் மூடநம்பிக்கைகளைப் போல தெரியலாம். ஆனால், அர்த்தமுள்ளவை என்பது ஆராய்ந்தால்தான் தெரியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.