ADVERTISEMENT

முதல்வரிடம் கோரிக்கை மனு: மாற்றுத்திறனாளி வாலிபருக்கு உடனடி பணி நியமன ஆணை!

07:11 AM Nov 21, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நவ. 18- ஆம் தேதி இரவு காரில் சேலம் வந்திருந்தார். குமாரபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது, குமாரபாளையத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்ற மாற்றுத்திறனாளி இளைஞர், முதல்வரை சந்தித்து வேலைவாய்ப்பு கேட்டு கோரிக்கை மனு அளித்தார். தான் 12- ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரியும் என்றும், அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த முதல்வர், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப்பிரிவில் கணினி இயக்குநராக பணி ஆணை வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நவ. 19- ஆம் தேதி, குமாரபாளையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மாற்றுத்திறனாளி இளைஞர் சாதிக்பாட்ஷாவிடம் பணி நியமன ஆணையை அமைச்சர் தங்கமணி நேரில் வழங்கினார்.

மாற்றுத்திறனாளி வாலிபர் கோரிக்கை மனு அளித்த மறு நாளே அரசு வேலை வழங்கி உத்தரவிட்ட முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள், உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT