ADVERTISEMENT

ஜப்தி நடவடிக்கையால் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்தவர் உயிரிழப்பு!

11:45 PM Oct 06, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனது வீட்டை ஜப்தி செய்யப் போவதாக வந்த அறிவிப்பால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.



திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக, கரோனா பரவலை தடுக்கும் வகையில், எட்டு தாலுகாக்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பெரும்பாலான மக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். திங்கட்கிழமை மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் தங்கள் பிரச்சனைகள் குறித்து மனுக்களை அளித்து வருகின்றனர்.



அதன்படி இன்று ஒருவர் கோரிக்கை மனுவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென அவர் மயக்கமடைந்து கீழே விழவே அங்கிருந்த காவலர்கள் அவரை தூக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மனைவியிடம் பார்த்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் தேனி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் எனத் தெரியவந்தது. இவர் தனது வீடு கட்டும் தேவைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் அடமானக் கடன் வாங்கியிருந்தார்.

அதனை செலுத்த முடியாததால் வீட்டை ஜப்தி செய்யப் போவதாக இவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அர்ஜுனன் ஜப்தி நடவடிக்கையில் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறு மனு அளிக்க வந்தார். ஆனால் வரும்போது விஷம் குடித்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT