
திண்டுக்கல்லில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 2 சிறுவர்கள் காணாமல்போன நிலையில், பல மணிநேர தேடுதலுக்குப் பின் இருவரும் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் வீர ஹரி (15). பத்தாம் வகுப்பு படித்து வரும் வீர ஹரி அதேபகுதியைச் சேர்ந்த வெள்ளியன் என்பவரது மகன் ரிசார்ட் (ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்) உடன் சேர்ந்து விடுமுறை தினமான இன்று ரெட்டியபட்டி அருகே உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர்.அப்பொழுது இருவரும் குளத்தில் தவறி விழுந்து மூழ்கினர். நீச்சல் தெரியாத காரணத்தினால் இருவரும் நீரில் மூழ்கிய நிலையில்தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் 2 மாணவர்களையும் பலமணிநேர தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்டனர்.
தற்பொழுது சிறுவர்களின் உடல்கள்திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் குவிந்துள்ள நிலையில், உயிரிழந்த சிறுவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)