ADVERTISEMENT

தினகரன் கட்சி செயலிழந்து விடும்: ஜெ.தீபா பேச்சு

01:26 PM Jun 08, 2018 | Anonymous (not verified)


ADVERTISEMENT

நாகை மாவட்டம் சீர்காழியில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா மற்றும் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தீபா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ADVERTISEMENT

பின்னர் பேசிய தீபா,

" தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மறக்க முடியாத துயறமும் கூட. ஜனநாயக ஆட்சி நடக்கும் இக்காலகட்டத்தில் மக்களின் போராட்டத்தை கையாள பல்வேறு வழிகள் உள்ளன.

பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு 99 நாட்கள் ஆதரவு அளித்ததும் இந்த அரசுதான். ஆனால் திடீரென போராட்டத்தில் இருந்த மக்கள் மீது துப்பாக்சி சூடு நடத்தி மக்களை படுகொலை செய்திருக்கிறது. மக்களை படுகொலை செய்யும் மக்கள் விரோத ஆட்சி உடனே கலைக்கப்படவேண்டும்.


நீட் தேர்வினால் ஏற்கனவே மாணவி அனிதா இறந்த போதே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளணி அரசாகவே இருந்தது. அதன் விளைவு தற்போது மற்றொரு மாணவி இறந்த பின்னரும் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு அறிவிப்பு கூட வெளியிடவில்லை. மத்திய மோடி அரசு தமிழகத்தை அடக்கி ஆள மட்டுமே நினைக்கிறது.

கர்நாடகா மீது உள்ள அக்கறைக் கூட தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு இல்லை. டி.டி.வி.தினகரன் தற்போது தனி கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும். தினகரன் கானல் நீரைப் போல காணாமல் போய் விடுவார்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT