ttv dhinakaran

Advertisment

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா உடலுக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.