ADVERTISEMENT

அமமுக நான்காம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... ஆர்.கே நகர் வேட்பாளரை அறிவித்த தினகரன்!

11:13 AM Mar 15, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 7ஆம் தேதிக்குள் விருப்பமனு அளிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் விருப்பமனு அளித்தவர்களிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்று கட்ட வேட்பாளர் பட்டியல் இதுவரை அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் 7 பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியில் இன்று (15.03.2021) வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிடிவி தினகரன் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஆர்.கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு டாக்டர் காளிதால் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலின்படி, அரக்கோணம் (தனி) - கே.சி.மணிவண்ணன், இராணிப்பேட்டை - ஜி. வீரமணி, ஆற்காடு - என். ஜனார்த்தனன், கீழ்பென்னாத்தூர் - பி.கே.எஸ். கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் - ராணி ரஞ்சிதம், நாங்குநேரி - பரமசிவ ஐயப்பன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT