டிடிவி.தினகரன் அணிக்கு சென்ற தங்கதமிழ்ச்செல்வனுக்கு எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதோடு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் தேனியில் நின்று தோல்விகண்டார். கடந்தசில தினங்களாக தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும்,பிரிந்து மீண்டும் அதிமுகவில் சேர இருப்பதாகவும்தகவல்கள் கசிந்து வந்தன.

இந்த நிலையில் அமமுகபிரமுகரை தொடர்பு கொண்டு தங்க தமிழ்ச்செல்வன் டிடிவி தினகரன் குறித்து ஆபாசமாகவும் சவால் விடுத்து பேசிய தொலைபேசிஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ammk

Advertisment

Advertisment

அதில், உண்மையிலேயே நான் வந்து விஸ்வரூபம் எடுத்தாநீங்க அழிஞ்சு போவீங்க நீ உட்பட அழிஞ்சு போவ, நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம்...... சொல்றாங்க, நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுறேன் பாருபாரு, என்ன நடக்குதுன்னு பாரு, ஆனா இந்த மாதிரி --------- அரசியல்வாதிய, உங்க டிடிவி தினகரன் கிட்ட சொல்லிடு இந்த மாதிரி அரசியல் பண்ண வேணாம் நீ தோற்றுப் போவ என்னைக்கும் ஜெயிக்க மாட்டனு என காட்டமாக பேசியுள்ளார் தங்கத்தமிழ்செல்வன்.

மேலும் அந்த ஆடியோவுக்கு தலைமை சரியில்லைநெல்லையிலும், கோயம்புத்தூரிலும் மண்டல பொறுப்பாளர்களால்கட்சி அழிந்துவிட்டது. இதை எடுத்துச்சொன்னால் நேரில் கண்டிக்காமல் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்படுகிறார்கள். என் மீது தவறென்றால் கட்சியை விட்டு நீக்குங்கள் என விளக்கமளித்துள்ளார் தமிழ்செல்வன்.

இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்இன்று காலை தேனி மாவட்ட நிர்வாகிகளோடு தனது இல்லத்தில் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.