ADVERTISEMENT

நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை துவங்கிவைத்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி

04:53 PM Aug 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூரில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவிய நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சியால் தற்போது வெகுவாக நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கரோனாவில் இருந்து முழுமையாக விடுபடுவதற்காக பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இலவசமாக அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT