Skip to main content

திருவாரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published on 31/01/2019 | Edited on 31/01/2019
co

 

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படியே திருவாரூரிலும் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் இன்று வெளியிட்டார். மாவட்டத்தில்  மொத்த வாக்காளர்கள் - 1001317 உள்ளதாக அறிவித்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நிர்மல்ராஜ், திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி. மன்னார்குடி ஆகிய நான்கு சட்டமன்ற உள்ளடக்கிய திருவாரூர் மாவட்டத்தின் வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார். 

 

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் - ஆண் வாக்காளர்கள் - 130716, பெண் வாக்காளர்கள் - 135421,  இதர வாக்காளர்கள் - 22, மொத்த வாக்காளர்கள் - 266159. 

நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் - ஆண் வாக்காளர்கள் - 130379, பெண் வாக்காளர்கள் - 127991,  இதர வாக்காளர்கள் - 7, மொத்த வாக்காளர்கள் - 258377. 

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் -ஆண் வாக்காளர்கள் - 113015, பெண் வாக்காளர்கள் - 115652,  இதர வாக்காளர்கள் - 1, மொத்த வாக்காளர்கள் - 228668, 

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் -ஆண் வாக்காளர்கள் - 121289, பெண் வாக்காளர்கள் - 126818,  இதர வாக்காளர்கள் - 6, மொத்த வாக்காளர்கள் - 248113.

மாவட்டம் முழுவதும் ஆண் வாக்காளர்கள் - 495399 , பெண் வாக்காளர்கள் - 505882,  இதர வாக்காளர்கள் - 36, மொத்த வாக்காளர்கள் - 1001317. 

 

"இன்று வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலே வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் அளித்தால், அது தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் துணை வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட வாயப்புகள் இருப்பதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.