ADVERTISEMENT

'மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்

01:28 PM Nov 22, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

"வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது. சென்னை- காரைக்கால் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

புயல் சின்னம் காரணமாக நவம்பர் 24- ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், நவம்பர் 25- ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை,செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது." இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி வரும் புயலுக்கு 'நிவர்' என பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT