ADVERTISEMENT

கோரிக்கை வைத்த மாணவி; நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

11:55 AM May 22, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஷா. தபித்தா சைக்கிளிங் வீராங்கனை ஆவார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, தற்போது நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்சல்லேன்ஸ் (NCOE - National Centre of Excellence) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் ஷா. தபித்தா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு ஏதுவாக போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கையினை பரிசீலித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிதிவண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தபித்தா கேட்டுக்கொண்டபடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT