coimbatore district student incident police investigation

Advertisment

கோவை சரவணம்பட்டியில் மாணவியை சாக்கு மூட்டையில் கட்டி கொன்ற கொலை வழக்கில், அவரைக் கொன்றது எப்படி? என்று கைதான கட்டடத் தொழிலாளி காவல்துறையினரிடம் நடித்துக் காட்டினார்.

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவர்14 வயது பள்ளி மாணவி. அதே பகுதியைச் சோ்ந்த கட்டிடத் தொழிலாளி முத்துக்குமாா் (வயது 44) என்பவரால் மாணவி கடந்த சிலநாட்களுக்குமுன்பு கொலை செய்யப்பட்டாா். பிறகு எரித்த சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி சிவானந்தபுரம் அருகே சாலையோரத்தில் வீசிசென்றார்.

கோவை கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார். இதையடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக முத்துக்குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துகைது செய்தனா்.

Advertisment

இதனைத் தொடா்ந்து சம்பவம் நடந்த இடம், சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு காவல்துறையினர், முத்துக்குமாரை அழைத்துச் சென்றனர். அங்கு, அவர் மாணவியைக் கொலை செய்தது எப்படி? என காவல்துறையினரிடம் நடித்துக் காண்பித்தார்.

அதனை காவல்துறையினர் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவரை பொள்ளாச்சிக் கிளை சிறையில் அடைத்தனர்.