ADVERTISEMENT

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மரங்கள் வெட்டி கொள்ளை

11:27 AM Sep 19, 2018 | Anonymous (not verified)

படம் மாடலே

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் 600க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு வனப்பகுதி போன்று மரங்கள் அடர்ந்து காணப்படும். இங்கே புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தர் மணிசங்கர், ஆசிரியர்களிடம் மாணவர்களுக்காக தான் நாம். மாணவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும் என்று பேசியுள்ளார். ஆனால் கொஞ்ச நாளில் படிக்கும் மாணவர்களின் கட்டணம், முதல் பல மடங்கு உயர்த்தியுள்ளார்.

ADVERTISEMENT

பல்கலைகழகத்தில் துய்மைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் பல மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை துணை வேந்தர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் இந்த மிகப்பெரிய இந்த வளாகத்தில் காய்ந்து போன மரங்கள் மற்றும் வளராத மரங்களை அவ்வப்போது கான்டிராக்டர்கள் மூலம் வெட்டி அகற்றுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பல்கலை. வளாகத்தில் உள்ள தேவையற்ற மரங்களை வெட்டியெடுக்க, புலியூரைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் கான்டிராக்ட் எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 16ம் தேதி முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரங்களை வெட்டிய கான்டிராக்டர், அப்பகுதியில் உள்ள காய்ந்த மரங்களோடு, வேம்பு, நொனா, வேலா உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பச்சை மரங்களையும் வெட்டி வெளியே கொண்டு செல்ல முயன்றார்.

இதைக் கண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், இது குறித்து, துணைவேந்தர் மணிசங்கரிடம் புகார் அளித்தனர். அவர் உடனடியாக மரங்களை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டதுடன் விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுத்தார். இந்த பணிகளை கண்காணிக்க வேண்டிய பணியில் இருக்கும் பல்கலை. அலுவலர்கள் அலெக்சாண்டர், அழகேசன் ஆகியோர் இந்த மர கடத்தலுக்கு உடந்தையாக இருக்கலாம் என்று மாணவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நவல்பட்டு போலீசில் புகார் அளிக்கவும் பல்கலை. நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பசுமை வளாகம் என்ற அழைக்கப்படும் பாரதிதாசன் பல்கலையில், பச்சை மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம், பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து துணைவேந்தர் மணிசங்கர் கவனத்துக்கு கொண்டு சென்றது. உடனே விசாரிக்க சொல்கிறேன் என்றார். இதற்கு இடையில் பல்கலைகழக பதிவாளர் சார்பில் நவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT