bharathidasan university semester exam date announced

பாரதிதாசன் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அனைத்து உறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும். ஏப்ரல் மாத இறுதி செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment