ADVERTISEMENT

எடப்பாடிக்கு கட்அவுட் வைத்தபோது மின்விபத்து; சிகிச்சை பலனின்றி ஒருவர் பலி!!

02:46 PM Oct 23, 2018 | kalaimohan

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையையொட்டி, அவருக்கு கட்அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஏழை கூலித்தொழிலாளிகள் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பெற்றவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றோருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று (அக்டோபர் 20, 2018) சேலம் வந்தார். ஓமலூர், தாரமங்கலம் ஆகிய இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.


இதையொட்டி அவரை வரவேற்கும் விதமாக கட்சியினர் சாலையின் இருமருங்கிலும் கட்அவுட்டுகள் வைத்திருந்தனர். தாரமங்கலம் பேருந்து நிலையம் எதிரில், எடப்பாடி பழனிசாமியின் கட்அவுட் உயரமாக வைக்கச் சொல்லி கட்சியினர் உத்தரவிட்டு இருந்ததால், பந்தல் தொழிலாளிகள் மணி, ராஜவேல் ஆகியோர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் உயரமான கட்அவுட்டை வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கட்அவுட்டை சணல் கயிறுகளால் கட்டுவதற்காக உயரமான சாரத்தின் மீது அவர்கள் இருவரும் ஏறினர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வயர் அவர்கள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதனை அடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்ட இருவரில் ஒருவரான ராஜவேல் தற்போது இறந்துள்ளார். மற்றோருவரான மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இறந்தவரின் உறவினர்கள் நீதிகேட்டுசாலைமறியலில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT