(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மத்தியபிரதேசத்தில் ஜீப் மற்றும் டிராக்டர் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 12 பேர் இறந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மத்தியபிரதேசம் மொரேனோ பகுதியில் அதிகாலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஜீப் மீது பின்னே சென்று கொண்டிருந்த டிராக்டர் பலமாக மோதி விபத்தாகிஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. எதிர்ப்பாராத விதமாக நடந்த இந்த கோரவிபத்தைப் பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். அதன்பிறகு விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஜீப் மற்றும் டிராக்டர்பலமாக மோதிக்கொண்டதால் இரண்டு வாகனமும் முழுமையாக சேதமடைந்ததால் மீட்புப்பணியில் சிரமம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கோரவிபத்தில் சிக்கி12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டிராக்டர் ஓட்டுநனரின் கவனக்குறைவாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் 12 பேர்களின் உயிரை வாங்கிய இந்த கோர விபத்தினால் அந்த பகுதியில் பரபரப்பும் சோகமும் சூழ்ந்துள்ளது.