ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் 1,413 கோடி நிகர லாபம்! என்.எல்.சி சாதனை! 

11:22 AM Jun 25, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

என்.எல்.சி. நிறுவன இயக்குனர்கள் குழு கூட்டம் நேற்று முன்தினம் (23/06/2020) நெய்வேலியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் கடந்த நிதி ஆண்டின் உற்பத்தி மற்றும் நிதி நிலையைச் செயல்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டன.

அதன்படி, கடந்த மார்ச் 31- ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டில் என்.எல்.சி. நிறுவனம் முறையே 2,524 கோடியே 65 லட்சம் மற்றும் 9,133 கோடியே 28 லட்சம் ரூபாய்கள் மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் (2018-2019) நான்காவது காலாண்டு மற்றும் முழு ஆண்டில் பெற்ற மொத்த வருவாயான 2,266 கோடியே 80 லட்சம் மற்றும் 8,059 கோடியே 25 லட்சத்தை விட இது முறையே 13.58 மற்றும் 13.33 சதவீதம் அதிகமாகும்.

நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டில் என்.எல்.சி நிறுவனம் முறையே 609 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மற்றும் 2192 கோடியே 29 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் (2018- 2019) நான்காவது காலாண்டில் உற்பத்தி செய்த மின்சக்தி அளவான முறையே 558 கோடியே 61 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மற்றும் 2067 கோடியே 61 லட்சத்து 80 ஆயிரம் யூனிட்டை விட இது முறையை 9.18 சதவீதம் மற்றும் 6.3 சதவீதம் அதிகமாகும். இதில் 1,884 கோடியே 8 லட்சத்து நாற்பதாயிரம் யூனிட் மின்சக்தி ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனம் அமைத்து வந்த 709 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையங்களில் உற்பத்தி தொடங்கியதன் மூலம் கடந்த நிதியாண்டில் 140 கோடியே 14 லட்சத்து இருபதாயிரம் யூனிட் பசுமை மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது

துணை நிறுவனங்களுடன் சேர்ந்து இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயானது நான்காவது காலாண்டு மற்றும் நிதி ஆண்டில் முறையை 3,405 கோடியே 14 லட்சம் மற்றும் 11,592 கோடியே 20 லட்சம் ஆகும். இது முந்தைய நிதி ஆண்டில் (2018- 2019) இந்த வகையில் பெற்ற மொத்த வருவாயான ரூபாய் 2,888 கோடியே 71 லட்சம் மற்றும் 10,778 கோடியே 47 லட்சத்தை விட இது முறையே 17.88 சதவீதம் மற்றும் 7.55 சதவீதம் அதிகமாகும்.

இவற்றின் மூலம் கடந்த நிதியாண்டில் ரூபாய் 1,413 கோடியே 85 லட்சம் நிகர லாபம் ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT