/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm987_0.jpg)
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது அலகின் இன்று (01/07/2020) காலை கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்..
இந்த நிலையில் என்.எல்.சி. கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கும்ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தகவல் கிடைத்தவுடன் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்."இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)