ADVERTISEMENT

கள்ளசாராய வியாபாரிகளை தட்டி தூக்கிய காவல் உதவி ஆய்வாளர்...

11:44 AM Feb 05, 2019 | sekar.sp



கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா. இவர் கள்ளசாராய வியாபாரிகளை எச்சரித்து, அந்த வியாபாரத்தை தடுத்து நிறுத்தினார்.

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி பகுதியல் கள்ளசாராய விற்பனையை செய்யாமல் அவர்களை ஓடவிட்டு வந்த நிலையில், குடும்ப பெண்கள் போர்வையில் குறிஞ்சிப்பாடி புவனகிரி சாலையில் இட்லி கடை நடத்தி வரும் காமாட்சி என்ற பெண்ணும், அவருக்கு துணையாக மதிவதனியும் கூட்டாக சேர்ந்து, புதுச்சேரியில் இருந்து கள்ளதனமாக சாரயம் மற்றும் புதுவை மாநில மதுபானங்களையும் கடத்தி வந்து குறிஞ்சிப்பாடியில் விற்பனை செய்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்த தகவல் காவல்நிலையத்திற்கு தெரிய வந்ததும், அதிரடியாக இருவரையும் கையும் களவுமாக கைது செய்தார் காவல் உதவி ஆய்வாளர் பிரசன்னா. குறிஞ்சிப்பாடி காவல் நிலைய காவலர்களும் உடன் இருந்தனர்.

இவரின் அதிரடியால், திருட்டு, வழிபறி, போன்ற குற்ற சம்பவங்கள் தற்போது குறைந்து உள்ளதாக மக்கள் பாராட்டுகின்றனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இவரின் சிறப்பான காவல் பணிக்கு குடியரசு தினத்தில் பாராட்டு மடலும் வழங்கியனார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT