Skip to main content

தடையை மீறி வெளியே வந்தால் நடவடிக்கை -கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஊரடங்கு கடுமையான விதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாரத்தில் இரு நாட்கள் மட்டும் வெளியே வந்து நகர பகுதிகளில் அத்தியாவாசிய பொருட்கள் வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரோஸ், சிகப்பு, பச்சை என மூன்று வண்ணத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அட்டைக்கும் இரு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் மருந்து பொருட்கள் மட்டும் வாங்கி கொள்ளலாம், மீதி எந்த அத்தியாவாசிய பொருட்களையும் வாங்க முடியாது. அப்படியாக கடலூரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 Cuddalore district collector orders action


இந்த நிலையில் ஊராட்சி பகுதிகளில் சில்லரை கடைகள் வைத்துதிருக்கும் வியாபாரிகளுக்கு வட்டார வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் மூலம் தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் நகர பகுதிக்கு வந்து அத்தியாவாசிய பொருட்களை வாங்கி சென்று கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.
 

 nakkheeran app



இதனையொட்டி சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமையில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் சிதம்பரம் நகராட்சி மன்ற கூட்டறங்கில் நடைபெற்றது. இதில் ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகளவில் நடமாடும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவாசிய பொருட்கள் அடங்கிய வண்டிகளை, மக்கள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் மாவட்ட உதவி மைய எண் 1077யை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வீட்டை தேடிவரும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊராட்சியில் உள்ள மக்கள் மருத்துவமனை மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்கு நகரத்திற்கு உரிய சீட்டை காவல்துறையினரிடம் காண்பித்து மருந்துகளை வாங்கி செல்லலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே சுற்றினாலோ அல்லது அத்தியாவாசிய பொருட்கள் வாங்க வெளியே வந்தேன் என்றால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று அறிவித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்