ADVERTISEMENT

காட்டுமன்னார்கோயில் பகுதியில் நிபா வைரஸா? மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

05:44 PM Jun 18, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி ஒன்றியம் செட்டி கட்டளை கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம்( வயது 75). இவர் சமீப காலமாக கேரளாவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். தற்போது தனது சொந்த ஊரான செட்டி கட்டளைக்கு வந்த ராமலிங்கம் தனது மருமகன் வீடான காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலபூவிழுந்த நல்லூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

ADVERTISEMENT

அங்கு வந்த ராமலிங்கத்திற்கு ஜுரம் காய்ச்சல் அதிகமானதால் அவர் உடனடியாக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி செய்யப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது ரத்தம் மற்றும் சிறுநீரை எடுத்து பரிசோதனைக்காக புனே அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் காய்ச்சல் குறையாததால் சந்தேகம் அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்று மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி ஆரம்ப சுகாதார மருத்துவர் டாக்டர் முஹம்மது முஜம்மில் காட்டுமன்னார்குடி வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் உட்பட ஐந்து பேர் குழுக்களாக பிரிக்கப்பட்டு அக்கிராமத்தில் சுற்றியுள்ள கீழ பூவிழுந்த நல்லூர் , செட்டி தாங்கள், ராமகோட்டம், ரெங்கநாதபுரம் மேலபூவிழுந்த நல்லூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் மருத்துவ குழு யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தொற்று தெளிப்பான் மூலம் அப்பகுதியில் நோய் தடுப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நிபா வைரஸ் சம்பவத்தால் கிராமபகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT