Skip to main content

புதுவையில் நிபா அறிகுறியுடன் வந்தவருக்கு சிகிச்சை!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 

நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி வந்த எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

 

Treatment to person  with Nipha symptoms in puducherry

 

கேரளத்தில் நிபா வைரஸ் கடந்தாண்டு வேகமாக பரவியது. இச்சூழலில் நடப்பாண்டும் மீண்டும் இவ்வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளத்தையொட்டி அமைந்துள்ள மாஹே பிராந்தியமுமுள்ளது. அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வருவதால் இங்கும் நிபா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக மாஹே எல்லையில் அங்கிருந்து வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்ய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கென புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரு தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குபோதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் 24 மணி நேர பணியில் இருப்பார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவிகப்பட்டுள்ள நிலையில் எர்ணாகுளத்திலிருந்து பூச்சேரிக்கு சுற்றுலா வந்த நபர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி காணப்பட்ட நிலையில் அவர் மாற்றும் அவருடன் வந்த மூன்று பேர் என மொத்தம் நால்வருக்கு தனி வார்ட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.