ADVERTISEMENT

பக்தர்களோடு வந்து தீ மித்த பசு...

10:29 PM Mar 11, 2019 | bagathsingh

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பிரசித்தி பெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிவதால் மாவட்டம் முழுவதும் உள்ளூர விடுமுறை விடப்படும்.

ADVERTISEMENT

நேற்று பொங்கல் விழா நடந்த நிலையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்க்ள் பால்குடம், காவடி எடுத்தனர். அதே போல இன்று தேரோட்டம் என்பதால் காலை முதலே மக்கள் வரத் தொடங்கினார்கள். அதனால் 100 அடிக்கு ஒரு இடத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்த்து. அதே போல நூறு இடங்களுக்கு மேல் அன்னதான பந்தல்கள் அமைக்கப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தீ மிதிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மிகவும் பாதுகாப்பாக நடத்தப்பட்ட தீ மிதிக்கும் இடத்திற்கு தீ மிதிப்பவர்கள் மட்டும் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் போலிசார் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒரு பசுமாடு தீ மிதித்துக் கொண்டே சென்றது. இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்தனர். தொடர்ந்து தீ மிதித்த பக்தர்களுடன் கோயிலுக்கும் சென்றது அந்த பசு. இவ்வளவு பாதுகாப்பை மீறி எப்படி பசு தீ மிதிக்கும் இடத்திற்கு வந்தது என்பது பற்றி பக்தர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT