மாடு திருட வந்ததாக கூறிஒருவரை பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் நடந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இரவு நேரத்தில் வெளியூரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், மேலும் இரண்டு நபர்களுடன் ஆராரியா மாவட்டத்திலுள்ள ஹரிப்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை மாடு திருட வந்ததாக கூறி தாக்கியுள்ளனர். ஏற்கனவே ஒரு சில மாடு திருடிய வழக்குகள் அவர் மீது இருந்த நிலையில், ஒன்று சேர்ந்த ஹரிப்பூர் மக்கள் மாடு திருடத்தானே வந்த? என கேட்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர் கடைசியாக இறந்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மாடு திருட வந்ததாக கூறி இதே அராரியா மாவட்டத்தில் 55 வயதான முதியவர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.