ADVERTISEMENT

“இவ்வளவு டிஜிட்டல் வசதிகள் இருந்தும் ஏன் இது மட்டும் முடியவில்லை” - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

05:34 PM Oct 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளைத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது.

சட்டமன்ற பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சட்டமன்ற நிகழ்வுகள் பகுதி பகுதியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள் முழுமையாக ஒளிபரப்பு செய்யாமல் பாரபட்சம் காட்டப்படுவதாக மனுதாரர் தரப்பு வாதிட்டது.

மக்களவை நிகழ்வுகளும் மாநிலங்களவை நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது, இவ்வளவு டிஜிட்டல் வசதிகள் வந்துவிட்ட பிறகும் சட்டமன்றங்களின் நிகழ்வுகளை ஏன் முழுமையாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்பொழுது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முழுமையாக ஒளிபரப்பு செய்வது சாத்தியமற்றது. நிபந்தனையுடன் நேரடி ஒளிபரப்புகள் செய்யப்பட்டு வருகிறது' என ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை வைத்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

அப்பொழுது வேலுமணி தரப்பிலான வழக்கறிஞர், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய மத்திய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இது சாத்தியமானது தான்' என வாதிட்டார். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியுமா? என வேலுமணி தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் பத்தாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT