இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குபுதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்கூட இருக்கிறது. கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே வேதா இல்லம் தொடர்பாகஅதிமுக சார்பில் ஜெ. அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.