ADVERTISEMENT

சேலத்தில் 3 போலீஸ் எஸ்ஐக்களுக்கு கரோனா!

10:05 PM Oct 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சேலத்தில், பெண் எஸ்ஐ உள்பட மூன்று எஸ்ஐக்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, காவல்துறை வட்டாரத்தில் மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாநகர காவல்துறையில் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் செந்தில் மற்றும் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இதுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். தற்போது, பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 6 காவலர்களுக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐ மற்றும் பெண் எஸ்ஐ ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உடன் பணியாற்றி வந்த மற்றொரு எஸ்எஸ்ஐக்கும் நோய்த்தொற்று குறித்து பரிசோதனை செய்தபோது, அவருக்கும் கரோனா தொற்று உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை ஒழுங்குபடுத்துதல், கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் புறக்காவல் நிலைய காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள் காவல்துறையினர்.

கரோனா நோய்ப்பரவல் சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் ஒரே காவல்நிலையத்தில் அடுத்தடுத்து எஸ்ஐக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டதால் மாநகர காவல்துறை வட்டாரத்தில் நோய்த்தொற்று பீதி ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT