ADVERTISEMENT

மீண்டும் தலைதூக்கும் 'கரோனா'- மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்!

06:54 PM Jun 26, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக சற்று அதிகரித்து பதிவாகி இருந்த நிலையில் பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வேலூரில் பெரிய பெரிய வணிக வளாக கடைகளில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் எனவும், குறிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மருத்துவத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் இந்த அறிவுரையை தமிழ்நாடு மருத்துவதுறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,382 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1,472 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,677 இருந்து 7,548 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 691 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 624 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 607 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-241 பேருக்கும், கோவை-104, திருவள்ளூர்-85, காஞ்சிபுரம்-49, நெல்லை-47 என கரோனா பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT