
மருத்துவக் கல்வி இயக்குநராக பணிபுரிந்து வந்த நாராயணபாபு ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வரான சாந்தி மலர் மருத்துவக் கல்வி பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக பணியாற்றிய எட்வின் ஷோ 2019 ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றவுடன், அதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்குத்தகுதியானவர் பட்டியலில் பலர் இருந்தும் அப்போதைய அதிமுக அரசு பட்டியலில் இறுதியில் இருந்தவரை அவர்களின் சுயநலத்திற்காக முன்னே கொண்டு வந்து அழகு பார்த்தது.
ஆனால் அப்படி பட்டியலில் இருந்தவர்களில் ஒருவரைத்தான் தற்போது மருத்துவக் கல்வி பொறுப்பு இயக்குநராக அரசு நியமித்துள்ளது. முன்பு போலவே தற்போதையநியமனத்திலும் பல வியூகங்களை வகுத்து முன்னாள் அதிமுக அமைச்சரின் விசுவாசிகள் காய் நகர்த்தவே, அதை திமுக அரசு தவிடு பொடியாக்கி தகுதி அடிப்படையிலேயேநியமனம் நிகழ்ந்துள்ளது. தற்போதுள்ள திமுக ஆட்சியில் முன்பிருந்த அரசு போன்று இல்லாமல் நிர்வாகத்திறமையும், நேர்மையும் உடைய சாந்தி மலர் பொறுப்பு இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை மருத்துவர்களும், பல்வேறு மருத்துவ சங்கங்களும் ஒருமித்த கருத்தோடு வரவேற்றும், பாராட்டியும் வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)