Number of patients receiving over 8 thousand treatment- Today's corona situation!

Advertisment

தமிழகத்தில்பரவலாககுறைந்திருந்தகரோனாபாதிப்பானது சிலநாட்களாகசற்றுஅதிகரித்துப்பதிவாகி வந்த நிலையில் பல இடங்களில்கரோனாகட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில்முகக்கவசம்அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என நேற்று தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,472 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 1,461பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கரோனாவுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,548 இருந்து 8,222 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 697 பேர்டிஸ்சார்ஜ்ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 543 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 624 பேருக்குகரோனாபதிவு செய்யப்பட்டிருந்தது. செங்கல்பட்டில்-240 பேருக்கும், கோவை-181, திருவள்ளூர்-75, காஞ்சிபுரம்-47,விருதுநகர், திருச்சியில் தலா 36 பேருக்கு எனகரோனாபதிவாகியுள்ளது.