ADVERTISEMENT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு!

12:46 PM Aug 09, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருச்சியில் அனைத்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி நீர்ப்பாசனத் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சோழசிராமணி பகுதியில் காவிரி ஆற்றில் ராஜவாய்க்கால் பாசன பகுதியைப் பாலைவனமாக்கும் நோக்கோடு 2019இல் வழங்கப்பட்டுள்ள 42 இறவை பாசன திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும், காவிரியில் கீழ் பாசன விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் புதிய நீர் பாசன திட்டங்களை அனுமதிக்கக் கூடாது, காவிரி நீரை வணிக நோக்கோடு, தனிநபர் சுயநலத்திற்காக ஏக்கர் 1க்கு ரூ. 15 லட்சம் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் நோக்கோடு வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பி.ஆர். பாண்டியன் கூறுகையில், “இப்பிரச்சினை குறித்து தமிழக தலைமைச் செயலாளரிடமும் முதல்வரிடமும் மனு கொடுக்கப்பட்டு தலைமைச் செயலாளரும் இதுகுறித்த ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளார். எனவே தமிழக அரசு விரைவில் இந்த 42 இறவை பாசனத் திட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை விவசாயிகள் நாங்கள் கையில் எடுப்போம் என்று தெரிவித்துள்னர். கடந்த அதிமுக அரசு அறிவித்துள்ள இந்தத் திட்டத்தினால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பாசன வசதி பெற முடியாமல் பாலைவனமாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்பதால் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT