trichy district, additional 20 kg corn farmers

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூா் பகுதியில் மக்காச்சோளம் உற்பத்தி அதிகம் என்பதால், கோழிப்பண்ணைக்கு தேவையான மக்காசோளங்களைப் பெரும்பாலான வியாபாரிகள் இப்பகுதியில் வந்து கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் செங்காட்டுப்பட்டியைச் சோ்ந்த வியாபாரி சரவணன் என்பவர் வழக்கமாக துறையூா் விவசாயிகளிடம் வந்து மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்து செய்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நேற்று (02/01/2021) மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்ய இரண்டு லாரிகளில் சரவணன் வந்துள்ளார்.

அப்போது ஒவ்வொரு மூட்டையும் 100 கிலோ எடை உள்ளதாக பிரிக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி வந்துள்ளார். ஆனால் அப்பகுதி விவசாயிகளுக்கு மூட்டையின் எடை சற்று அதிகமாக இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், அவா்கள் வைத்திருந்த எலக்ட்ரானிக்எடை மிஷினை எடுத்த வந்து மூட்டையை எடை போட்ட போது மூட்டை 120 கிலோ காட்டியுள்ளது. ஆனால் அதே மூட்டையை வியாபாரி சரவணன் கொண்டு வந்த எடை மிஷினில் எடை போட்ட போது அது 100 கிலோ காட்டியுள்ளது. மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த சில மூட்டைகளை இறக்கி மீண்டும் எடை போட்டபோது ஒவ்வொரு மூட்டையிலும் 20 கிலோ கூடுதலாக நிரப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

Advertisment

trichy district, additional 20 kg corn farmers

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சரவணனையும், அவா் கொண்டு வந்திருந்த லாரிகளையும் சிறைப்பிடித்து வைத்தனா். இது குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் காவல்துறையினா் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சரவணனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மூட்டைக்கு ரூபாய் 300 பணம் கூடுதலாகச் செலுத்திச் செலுத்தினார்.

ஆனால் விவசாயிகள் பலமுறை இவரால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும், இதுவரை அந்த விவசாயிகளிடமிருந்து சுமார் 30 டன் மக்காச்சோளம் கொள்முதல் செய்திருக்கிறார். எனவே இவரை விடுவதாக இல்லை என்று தொடர்ந்து சிறைப்பிடித்துள்ளனா் விவசாயிகள். இந்த நிலையில் இரவு நேரம் இயற்கை உபாதைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சரவணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவா் கொண்டு வந்த லாரி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர் இதுவரை ஏமாற்றிய மொத்த பணத்தையும் திருப்பி கொடுக்கும் வரை லாரியை விடுவதாக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.