ADVERTISEMENT

தொடர் மழை... சென்னையில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு!

09:11 PM Dec 30, 2021 | kalaimohan

ADVERTISEMENT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 6 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. நகரின் முக்கிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது வரை இடி மின்னலுடன் சென்னையின் பல இடங்களில் மழைபொழிந்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், மீனம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னையில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை மயிலாப்பூரில் கனமழையால் வீட்டின் முன்புறம் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த லட்சுமணன் என்ற 11 வயது சிறுவன் தூக்கி வீசப்பட்டான். அதனைத்தொடர்ந்து தேங்கிய நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதேபோல் சென்னை ஓட்டேரியில் நியூ பேரண்ட்ஸ் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த லட்சுமி என்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் அம்மையம்மாள் தெருவில் மின்சாரம் பாய்ந்ததில் கீழே விழுந்த மீனா என்ற பெண் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT