ADVERTISEMENT

காந்தி தலையில் குண்டு - சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை எதிர்த்து காங்கிரஸார் போராட்டம்!!

03:56 PM Jun 19, 2019 | kalaimohan

தமிழகம் முழுவதும் கடந்த ஜீன் 14ந்தேதி வெள்ளிக்கிழமை இயக்குநர் மிஸ்கின் படமான, சுட்டு பிடிக்க உத்தரவு என்கிற திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டு உள்ளது. இந்த படத்துக்காக வடிவமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் காந்தி தலைமையில் துப்பாக்கி குண்டு இருப்பது போல உள்ளது.

ADVERTISEMENT


இது காங்கிரஸ் கட்சியினரை கொதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போஸ்டரை கண்டித்து, வேலூர் மாவட்டம் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைப் பார்த்து ராணிப்பேட்டை காங்கிரஸார் படம் ஓடும் தியேட்டரான ராஜேஸ்வரி தியேட்டர் முன்பு கூடி, மகாத்மா காந்தி தலையில் துப்பாக்கி குண்டு இருப்பது போல அமைக்கப்பட்ட போஸ்டரை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். அதோடு, மகாத்மா காந்தியையும் இந்திய ரூபாய் நோட்டை அவமதித்த திரைப்படக் குழுவினரின் அதைக் கண்டு கொள்ளாத தணிக்கை குழுவையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ADVERTISEMENT


இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ராணிப்பேட்டை நகர காங்கிரஸார் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. தியேட்டர் நிர்வாகத்தின் மூலம் இந்த தகவலை கேள்விப்பட்ட இயக்குநர் உட்பட படக்குழு, அதிர்ச்சியும், ஆனந்தமும் அடைந்தாக கூறப்படுகிறது.

இப்படியொரு படம் வந்ததே பெரும்பாலான மக்களுக்கு தெரியாது. காங்கிரஸார் போராட்டம் நடத்தி படத்துக்கு இலவச விளம்பரம் தேடி தந்துவிடுவார்கள் போல என கிண்டல் அடிக்கின்றனர் சினிமா ரசிகர்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT