பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதவை திரும்பப்பெறும்படி நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குறிப்பாகடெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகமாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் ஜார்கண்டின் பர்ஹாயத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில்பேசிய பிரதமர் மோடி,

modi speech

சில கட்சிகள், சமூக விரோதிகள் மாணவர்களை தூண்டி விடுகின்றன. கல்லூரி மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துங்கள், நாங்கள் உங்கள் கூற்றை கேட்கிறோம். எதிர்க்கட்சிகள் கொரில்லா அரசியலை நிறுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டம்தான் எங்களது புனித புத்தகம்.

Advertisment

பாகிஸ்தான் மக்கள்அனைவருக்கும் குடியுரிமை தர காங்கிரஸ் தயாரா? தயார் என்று வெளிப்படையாக கூற தைரியம் இருக்கிறதா? காஷ்மீர், லடாக்கில் 370 ஆவது சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவந்துவிடும். இந்திய இஸ்லாமியர்களை அச்சமூட்டுவதற்காக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும்பொய்களை கட்டவிழ்த்தது விடுகின்றன என்றார்.