nirmala sitharaman

Advertisment

நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் திமுக காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக மக்களால் ஏற்க முடியாத திட்டங்களை திமுக அங்கம் வகித்த கூட்டணி அரசு தான் கொண்டு வந்தது. அந்த திடடங்களை கொண்டுவந்தது ஏன்? முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்காக மோடி அரசை குறை கூறுவது முறையல்ல. ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் மத்திய அரசு திட்ட பலன்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறேன். வருகின்ற 15ஆம் தேதி வரை இந்த ஆய்வு தொடரும் என்று கூறினார்.