ADVERTISEMENT

'திருப்பணி செம்மல்' விருது பெற்ற விருத்தாசலம் அகர்சந்த்... குவியும் பாராட்டுகள்...

06:18 PM Nov 02, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதியில் 'ஜெயின்' ஜுவல்லரி என்ற நகைக் கடை நடத்திவருபவர் அகர்சந்த். அவருக்குச் சமீபத்தில் 'திருப்பணி செம்மல்' விருது மற்றும் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 500 -க்கும் மேற்பட்ட கோவில்களின் திருப்பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்துள்ளார். பல்வேறு புதிய கோயில்களையும் ஏற்கனவே பராமரிப்பின்றி சிதிலமடைந்த கோவில்களையும் புனரமைப்புச் செய்து குடமுழுக்கு நடத்துவதற்கு உதவிகளைச் செய்துள்ளார்.

ADVERTISEMENT

தனது வருமானத்தில் பெரும் பகுதியை ஆன்மிகப் பணிகளுக்கும் பள்ளிக் கல்வி பணிகளுக்கும் விபத்துகளில் கை கால்களை இழந்து சிரமப்படுபவர்களுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்கும் உதவி செய்து வருகிறார். மேலும், இதயக் கோளாறு உள்ளவர்களை மருத்துவமனைகளில் சேர்த்து உதவி செய்வது, கண் பார்வை குறைபாடு உள்ள முதியோர்களுக்கு முகாம் நடத்தி அவர்களுக்கு கண் பார்வை கிடைக்கச் செய்வதோடு இலவசக் (கண்) கண்ணாடிகள் வழங்குவது உட்பட ஏராளமான சமூகப் பணிகளை சந்தோஷத்தோடு செய்துவருகிறார்.


'லயன்ஸ் கிளப்', 'ரோட்டரி கிளப்' போன்ற சமூக நல அமைப்புகள் மூலமும் மக்களுக்கான உதவிகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார். விருத்தாசலம் அருகில் வெட்டவெளியில் வெயிலிலும் மழையிலும் பல ஆண்டுகாலம் கிடந்த சிவலிங்கத்தை எடுத்து 'ஏக நாயகர்' என்ற பெயரில் பெரிய ஆலயத்தினை உருவாக்கியிருக்கிறார். 'ஏக நாயகர்' கோவிலில் பசு காப்பகமும் நடத்தி வருகிறார்.


இப்படி ஆன்மிகத்தோடும் சமூகப் பணியோடும் இரண்டர கலந்து, பல்வேறு ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உதவிவரும் 'அகர்சந்த்' தற்போது கௌரவிக்கப்பட்டுள்ளார். 26 -ஆவது தருமை ஆதீனம் குருமகாசந்நிதானம் மாசிலாமணி, விருத்தாசலம் 'ஜெயின்' ஜுவல்லரி உரிமையாளர், எம்.அகர்சந்துக்கு 'திருப்பணி செம்மல்' விருது மற்றும் 'தங்கப் பதக்கம்' வழங்கி கௌரவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT