ADVERTISEMENT

பழங்குடியினருக்கு வீடுகட்டுவதில் மோசடி; ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

07:30 PM Nov 25, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது காடாம்புலியூர். இந்த ஊராட்சியில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விளிம்பு நிலையில் உள்ள வீடற்ற பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி அந்த ஊரில் வசித்து வந்த 6 பழங்குடி இருளர் இன குடும்பத்தினருக்கு வீடு கட்டுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஒப்புதல் அனுமதி அளித்தனர். அதன்படி தற்போது அந்த இடத்தில் ஆறு வீடுகள் கட்டப்பட்டு தளம் ஒட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கான பணிக்கான உத்தரவு கடிதத்தில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகர்கள் பயனாளிகளின் கையொப்பங்களை அவர்களே போட்டுக்கொண்டு வீடுகள் கட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பயனாளிகள் அனைவரும் கைநாட்டு வைப்பவர்கள் என்பதும், பயனாளிகளின் பெயரை கையொப்பமாக அலுவலர்களே போட்டுக்கொண்டதும் அம்பலமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடு செய்து போலி ஆவணம் தயாரித்த அலுவலகர்களை பணி நீக்கம் செய்யக்கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT