ADVERTISEMENT

கோவையில் ''பேத்தடின்'' போதை மருந்து விற்ற பெங்களூர் கும்பல் கைது!

07:21 AM Jul 25, 2018 | vasanthbalakrishnan

பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்து கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ய முயன்ற இளைஞர்கள் 4 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்தினை திருடி போதை ஊசி தயாரித்ததாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,

ADVERTISEMENT

இன்று காந்திபுரத்தில் பெத்தடின் போதை மருந்து பயன்படுத்தும் கும்பல் இருப்பதாகவும், பெங்களூரில் இருந்து பெத்தடின் போதை மருந்தை ஆம்னி பேருந்துகள் மூலம் கடத்தி வந்து கோவையில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெங்களுரை சேர்ந்த ஜாய் இம்மானுவேல் கோவையை சேர்ந்த சிகாஸ், ஜில்பிகான் அலி, முகமது அனாப் 4 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது பெங்களூரில் இருந்து குறைவான விலைக்கு பெத்தடின் போதை மருந்தை வாங்கி வந்து கோவையில் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விநியோகம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து ஜாய் இம்மானுவேல், சிகாஸ், ஜில்பிகான் அலி, முகமது அனாப் ஆகிய 4 பேரையும் கைது செய்த காட்டூர் காவல் துறையினர் அவர்களை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 4 பேரையும் வரும் ஆகஸ்ட் 7 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும் படி நீதிபதி உத்திரவிட்டார்.இதனை தொடர்ந்து 4 பேரையும் காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT