ADVERTISEMENT

“சென்னையில் மழை என்றதுமே பதறும் காலம் மாறிவிட்டது” - முதல்வர் ஸ்டாலின்

11:58 AM Nov 04, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதன் காரணமாக, தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் துரிதமாகச் செயல்பட்டு தேங்கிய மழைநீரை அகற்றி வருகின்றனர். சில இடங்களில் மழைநீர் வடிகால் மூலம் நீரை அகற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம். தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும். மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT