Skip to main content

மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம்!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017
மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம்!



மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 122 இடங்களைப் பெற வேண்டிய மாற்றுத்திறனாளிகளில் வெறும் 5 இடங்கள் மட்டும் தரப்பட்டுள்ளது.

மொத்தம் 58 விண்ணப்பங்கள் வந்ததாகவும் அவற்றில் நீட் தேர்வில் தேறிய 20 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர் மட்டுமே மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோலுக்குள் வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுபோலவே, விளையாட்டுக் கோட்டாவுக்கு 427 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவர்களில் 10 பேர் கலந்தாய்வுக்கு வரவழைத்து மூவருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

முன்னாள் ராணுவத்தினர் கோட்டாவுக்கு 513 விண்ணப்பங்கள் வந்ததாகவும், 471 பேர் தகுதிவாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களில் 60 பேர் கலந்தாய்வுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கும் எம்பிபிஎஸ் சீட்டுகளும், 1 பல்மருத்துவ சீட்டும் கொடுக்கப்பட்டது என்று கூறினார்கள்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.




சார்ந்த செய்திகள்