ADVERTISEMENT

சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு சென்னையில் தொடக்கம்...!

03:18 PM Jan 24, 2020 | Anonymous (not verified)

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சிஐடியு-வின் 16-வது அகில இந்திய மாநாடு ஜனவரி 23 அன்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 200 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT



மாநாட்டில், சிஐடியு அகில இந்திய செயலாளர் தபன் சென், அகில இந்திய தலைவர் ஹேமலதா, டி.கே. ரங்கராஜன் எம்பி, சிஐடியு தமிழ்நாடு மாநில தலைவர் சௌந்தர்ராஜன் என நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 200 பிரதிநிதிகள் மற்றும் உலக தொழிலார் சம்மேளனம் தலைவர் மாவாண்டில் மக் வாய்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



மாநாட்டில் சிஐடியு கொடியேற்றத்துடன், மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வரும் 27-ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இறுதி நாளில் சைதாப்பேட்டையில் இருந்து பேரணி தொடங்கி, ஒய்.எம்.சி.ஏ மைதானம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு.வின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தமிழ்நாடு மாநில தலைவர் திரு.சௌந்தர்ராஜன், "விவசாயிகள் பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, வியாபாரிகளின் பிரச்சனை, பொதுமக்களின் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT