ADVERTISEMENT

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் கவர்னர் ஆலோசனை 

08:32 AM Apr 02, 2018 | rajavel


ADVERTISEMENT


தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நேற்று பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை இந்த கூட்டம் நடந்தது.

ADVERTISEMENT

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசு மீது, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதையும் கவர்னர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்தும் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. காவிரி பிரச்சினைக்காக செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன. இதற்கிடையே சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைதாகி விடுதலையானார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT