Published on 04/07/2020 | Edited on 04/07/2020

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (04/07/2020) மாலை 05.00 மணியளவில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட பரபரப்பான சூழலுக்கு இடையே ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார்.
கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை, முதல்வர் 4- ஆம் முறையாகச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.