ADVERTISEMENT

“12ஆம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முதல்வர் முடிவெடுப்பார்” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

10:50 AM Jun 03, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்ததினத்தை முன்னிட்டு, முன் களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இரண்டு நாட்களில் கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரிய அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு, தோழமை கட்சியினர் ஆகியோரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, இரண்டு நாட்களில் தெரிவிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தின் அடிப்படையில் ஆலோசனை செய்து, நாளை (04.06.2021) மாலை 4 மணிக்கு சென்னையில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெறும் CEO, DEO, கல்வியாளர்கள் ஆகியோரது கருத்தின் அடிப்படையில் நாளை மறுநாள் காலை முதலமைச்சரிடம் அனைத்து கருத்துக்களும் தெரிவிக்கப்படும். இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் இறுதி முடிவை எடுப்பார். கிராமப்புற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தெரிவிக்கலாம். ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்தோமோ, அதைப்போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கும் நல்ல முறையில் மதிப்பெண் கொடுக்கப்படும் என பிரதமர் சொல்லியிருக்கிறார்? அது எந்த முறையில் என தெரியவில்லை.

ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்தனர். ரமேஷ் போக்ரியால் அனுப்பிய கடிதத்தில் கூட தேர்வுகளை எப்படி நடத்தலாம் என்றுதான் கருத்து கேட்டார்களே தவிர, தேர்வு ரத்து செய்வது குறித்து எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். முதல்வர் சொன்னபடி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உடல்நலமும் முக்கியம். கரோனா காலம், பிளஸ் டூ தேர்வு குறித்து தற்போது ஆலோசனை செய்துவரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் கடந்த 2013, 2017, 2018 ஆண்டுளில் டெட் எழுதி காத்திருப்பவர்களுக்குப் பணி வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT