/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-at-thanjai.jpg)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றுவிமானம் மூலம் வந்த அவர், மாலை சாலை மார்க்கமாக தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மற்றும் அண்ணாவின் திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார். அதன்பிறகு இன்று காலை தஞ்சையில் நடைபெற்ற மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)