கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சு.செல்வம். இவர் பகுதிநேர ஓவிய ஆசிரியராக சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்துவருகிறார்.
இந்த நிலையில், இவர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தர அரசாணை வெளியிட வேண்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கிகொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டஇருவர் படத்தையும் முப்பது நிமிடங்களில் வரைந்தார். இதன் மூலம் அரசின் கவனத்திற்கு அவரது கோரிக்கையை கொண்டு சேர்க்கமுயற்சி செய்தார். பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வமின் இச்செயலைக் கண்டு, ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் அவரைப்பாராட்டினார்கள்.